Lord Shiva Directly control and supervise the Navagragha's ?
Lord Shiva Directly control and supervise the Navagragha's ?
Sree Siththa Natheswarar along with Sree Sounthara nayaki temple, Thirunaraiyoor is 65th (Sitheechwaram) Thevara temple of Chozha Nadu located in south shore of the river Cauverei. Temple Greatness which we came acrosss
LORD DHAKSHINAMOORTHY
The Navagragha's are Facing Toward Lord Dhakshinamoorthy only in this temple and It Resemble as Lord Shiva Directly control and supervise the Navagragha's.
பாடல்
எண் : 1
நீரும்
மலரும் நிலவும் சடைமேல்
ஊரும்
மரவும் உடையான் இடமாம்
வாரும்
மருவி மணிபொன் கொழித்துச்
சேருந்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 2
அளைப்பை
அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக்
கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கைம்
மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்குந்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 3
இகழுந்
தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி
யொடுவில் உடையோன் பதிதான்
முகிழ்மென்
முலையார் முகமே கமலம்
திகழுந்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 4
மறக்கொள்
அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள்
விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள்
கமலந் நனிபள் ளிஎழத்
திறக்குந்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 5
முழுநீ
றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர்
மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர்
கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 6
ஊனா
ருடைவெண் டலைஉண் பலிகொண்
டானார்
அடலே றமர்வான் இடமாம்
வானார்
மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 7
காரூர்
கடலில் விடம்உண் டருள்செய்
நீரூர்
சடையன் னிலவும் மிடமாம்
வாரூர்
முலையார் மருவும் மறுகில்
தேரூர்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 8
கரியின்
னுரியுங் கலைமான் மறியும்
எரியும்
மழுவும் உடையான் இடமாம்
புரியும்
மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியுந்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 9
பேணா
முனிவான் பெருவேள் வியெலாம்
மாணா
மைசெய்தான் மருவும் மிடமாம்
பாணார்
குழலும் முழவும் விழவில்
சேணார்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 10
குறியில்
வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும்
மழுவாட் படையான் இடமாம்
நெறியில்
வழுவா நியமத் தவர்கள்
செறியுந்
நறையூர்ச் சித்தீச் சரமே
பாடல்
எண் : 11
போரார்
புரம்எய் புனிதன் அமரும்
சீரார்
நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ
ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார்
இமையோர் உலகெய் துவரே
INTEREST TO KNOW MORE ?
Team - Tirikala