SHIVA SERIES - MAHA SADHA SHIVA MOORTHY -AC
MAHA SADHA SHIVA MOORTHY - மகா சதாசிவ மூர்த்தி
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், மகா சதாசிவ மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் மகா சதாசிவ மூர்த்தி வடிவமானது இருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம்.
பெயர் :மகா சதாசிவ மூர்த்தி
வாகனம் :நந்தி தேவர்
மூர்த்த வகை :மகேசுவர மூர்த்தம்
விளக்கம்: இவர் கைலாயத்தில் இருப்பவர் . இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர் . எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம் . அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர் .
மேலும் இவரைச் சூழ்ந்தவாறு ருத்ரர்களும் , சித்தர்களும் , முனிவர்களும் உள்ளனர் . அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர் .
இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன . மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும் .
மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது . அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன .
தரிசன இடங்கள்:
இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும் . இந்த மகா சதாசிவ மூர்த்தி வடிவம் கோயில்களில் சிலை வடிவில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் கோயில் கோபுரங்களில் சுதை வடிவில் காணப்படுகின்றன .
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்தில். காஞ்சிபுரம் கரகரேசுவரர் கோயிலின் விமானத்தில்.
வைத்தீசுவரன் கோயில் கோபுரம் மற்றும் தில்லைக் கோயில் கோபுரம் ஆகியவற்றில் சுதை வடிவில் மகா சதாசிவ மூர்த்தி வடிவம் காணப்படுகிறது.
Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Saravanan