SHIVA SERIES - KAURILILA CAMANVITA MOORTHI

KAURILILA CAMANVITA MOORTHI - கௌரிலீலா சமன்வித மூர்த்தி சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன். தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார். சிவனின் 64 தாண்டவ வடிவங்களில் , கௌரிலீலா சமன்வித மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். கௌரிலீலா சமன்வித மூர்த்தி ப்ரம்மவின் உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம் வடிவாகும். பெயர் :கௌரிலீலா சமன்வித மூர்த்தி வாகனம் :நந்தி தேவர் மூர்த்த வகை :மகேசுவர மூர்த்தம் விளக்கம்: திருக்கைலையில் சிவபெருமான் சிங்காசனத்தில் எழுந்தருளியுள்ளார...