Translate

SHIVA SERIES -64 FORMS

Tirikala's  - Lord Shiva Series - 64 Forms

சிவவடிவங்கள் என்பது சைவர்களின் இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும்  அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன

Tirikala Nadi astrology


64 வடிவங்கள் அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும் , அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன . ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன . 

சதாசிவ வடிவத்தின் ஈசானம் , தத்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து , முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின .

இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன . இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன . - 

  1. இலிங்க மூர்த்தி இலிங்கமாக தோன்றிய வடிவம் 
  2. இலிங்கோத்பவ மூர்த்தி இலிங்கத்தில் தோன்றிய வடிவம் 
  3. முகலிங்க மூர்த்தி இலிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம் 
  4. சதாசிவ மூர்த்தி ஐந்து முகத்துடன் உள்ள வடிவம் 
  5. மகா சதாசிவ மூர்த்தி இருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம் 
  6. உமாமகேஸ்வர மூர்த்தி உமையுடன் பொருந்திய வடிவம் 
  7. சுகாசன மூர்த்தி நல்லிருக்கை நாதர் 64 சிவ வடிவங்கள் 
  8. உமேச மூர்த்தி உமையுடன் நின்றருளும் வடிவம் 
  9. சோமாஸ்கந்த மூர்த்தி உமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம் 
  10. சந்திரசேகர மூர்த்தி பிறை சூடியுள்ள வடிவம் 
  11. இடபாரூட மூர்த்தி விடையேறி - காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம் 
  12. இடபாந்திக மூர்த்தி அறவெள் விடைக்கு அருளிய வடிவம்
  13. புஜங்கலளித மூர்த்தி | பாம்புகளைக் காத்து அருளிய வடிவம் 
  14. புஜங்கத்ராச மூர்த்தி பாம்புகளை அடக்கிய வடிவம் 
  15. சந்த்யான்ருத்த மூர்த்தி மாலைநேர நடன வடிவம் 
  16. சதாநிருத்த மூர்த்தி எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம் 
  17. சண்டதாண்டவ மூர்த்தி காளி காண ஆடிய நடன வடிவம் 
  18. கங்காதர மூர்த்தி கங்கையணிந்த வடிவம் 
  19. கங்காவிசர்ஜன மூர்த்தி முடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம் 
  20. திரிபுராந்தக மூர்த்தி முப்புரமெரி செய்த வடிவம் - முப்புரமெரித்த வடிவம்
  21. கல்யாணசுந்தர மூர்த்தி மணவழகர் வடிவம் உமைபங்கன் 
  22. அர்த்தநாரீஸ்வர மூர்த்தி உமையை இடப்பாகமாகக் கொண்டவன் 
  23. கஜயுக்த மூர்த்தி காயாசுரனை கொன்ற வடிவம் 
  24. ஜ்வாரபக்ன மூர்த்தி சுரம் நீக்கும் வடிவம் 
  25. சார்த்தூலஹர மூர்த்தி புலியினை அழித்த வடிவம் 
  26. பாசுபத மூர்த்தி அருசுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம் 
  27. கங்காள மூர்த்தி வாமனை கொன்று முதுகெழும்பினைக் கொண்ட வடிவம் 
  28. கேசவார்த்த மூர்த்தி மாலொரு பாகர் வடிவம் 
  29. பிச்சாடன மூர்த்தி பலிகொள் செல்வர் வடிவம் 
  30. சரப மூர்த்தி ( சிம்ஹக்ன ) சரப வடிவம் 
  31. சண்டேச அனுக்ரஹ மூர்த்தி சண்டேசருக்கு அருளிய வடிவம் 
  32. தட்சிணாமூர்த்தி தென்முகக் கடவுள் 
  33. யோக தட்சிணாமூர்த்தி தவநிலைத் தென்முகக் கடவுள்
  34. வீணா தட்சிணாமூர்த்தி வீணையேந்திய தென்முகக் கடவுள் 
  35. காலந்தக மூர்த்தி காலனைக் கொன்ற வடிவம் 
  36. காமதகன மூர்த்தி  காமனை எரித்த வடிவம் 
  37. இலகுளேஸ்வர மூர்த்தி புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம் 
  38. பைரவ மூர்த்தி பைரவர் 
  39. ஆபத்தோத்தரண மூர்த்தி முனிவர்களின் இடர் களைந்த வடிவம் 
  40. வடுக மூர்த்தி முண்டாசுரனை கொன்ற வடிவம் 
  41. சேத்திரபால மூர்த்தி ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம் 
  42. வீரபத்ர மூர்த்தி வீரபத்திரர் 
  43. அகோர மூர்த்தி சச்தந்துவை கொன்ற வடிவம் 
  44. தட்சயஞ்யஷத மூர்த்தி தக்கன் வேள்வியை தகர்த்த வடிவம் 
  45. கிராத மூர்த்தி வேட்டுருவர் 
  46. குரு மூர்த்தி மாணிக்கவாசகருக்கு அருளியது 
  47. அசுவாருட மூர்த்தி குதிரையேறு செல்வர்
  48. கஜாந்திக மூர்த்தி ஐராவதத்திற்கு அருளிய வடிவம் 
  49. சலந்தரவத மூர்த்தி சலந்தரனைக் கொன்ற வடிவம் 
  50. ஏகபாதத்ரி மூர்த்தி ஒற்றை திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம் 
  51. திரிபாதத்ரி மூர்த்தி மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம் 
  52. ஏகபாத மூர்த்தி ஒற்றை திருவடியுடைய வடிவம் 
  53. கௌரிவரப்ரத மூர்த்தி உமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம் 
  54. சக்கரதான மூர்த்தி திருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம் 
  55. கௌரிலீலாசமன்வித மூர்த்தி உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம் 
  56. விசாபகரண மூர்த்தி நீலகண்டர் 
  57. கருடன் அருகிருந்த மூர்த்தி கருடனுக்கு அருளிய வடிவம் 
  58. பிரம்ம சிரச்சேத மூர்த்தி பிரம்மாவின் தலையை கொய்த வடிவம்  (அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம் ) 
  59. கூர்ம சம்ஹார மூர்த்தி கூர்ம வடிவ திருமாலை அடக்கிய வடிவம் 
  60. மச்ச சம்ஹார மூர்த்தி மச்ச வடிவ திருமாலை அடக்கிய வடிவம்
  61. வராக சம்ஹார மூர்த்தி வராக வடிவ திருமாலை அடக்கிய வடிவம் 
  62. பிரார்த்தனா மூர்த்தி உமையின் ஊடலைத் தணித்த வடிவம் இரத்த பிட்சா பிரதான 
  63. மூர்த்தி தேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம் 
  64. சிஷ்ய பாவ மூர்த்தி முருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம்

Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Saravanan

Team - Tirikala

      

Read also   What is  Paadal Petra Sthalam ?

                                             2021 © Tirikala Nadi Astrology Center                   

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE