SHIVA SERIES - LINGA MOORTHY - AC
LINGA MOORTHY -லிங்க மூர்த்தி
சிவனை நினைத்து, சிவமயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், லிங்க மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் லிங்க மூர்த்தி வடிவமானது ஐந்து உணர்வு உறுப்புகள் அற்றது, எந்த வடிவமும் இல்லை. இது மனம், பேச்சு மற்றும் செயலுக்கு மேலானது.
பெயர்: லிங்க மூர்த்தி
வாகனம்: நந்தி தேவர்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
விளக்கம்:நம்முடைய புராணங்களும் , வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது . மெய் , வாய் , கண் , மூக்கு , செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது . மனம் , சொல் , செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது . உருவமற்றது . ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது . அதுவே அனைத்துமானது , பற்பல குணாதிசயங்களைக் கொண்டது . நிறமில்லாதது , அழிவென்பதே இல்லாதது , ஈரேழு உலகங்களும் தோன்ற , அழிய காரணமாயிருப்பது.
இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது . இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும் .
மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட , இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத , உலகம் தோன்ற , அழிய காரணமான இதனை உருவம் உள்ளது , அதாவது சகளம் என்றும் , உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம்.
லிங்கம்: மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம் . லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது . அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும்.
பெயர்க் காரணம்: லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம் , வியக்தம் , வியக்தாவியக்கம் . இதில் கை , முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம் , வெளிப்படுவது வியக்தம் .அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரி இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்
லிங்க வகைகள்: எண்ணிலடங்கா வகைகளும் அற்புதமான லிங்கங்கள் பூவுலகில் உள்ளன. இன்று முழுவதும் கூறிக்கொண்டே போகலாம் அவற்றில் ஒரு சிலவற்றை காணலாம். சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.
1. சிவ சதாக்கியம்.
2. அமூர்த்தி சதாக்கியம்.
3. மூர்த்தி சதாக்கியம்.
4. கர்த்திரு சதாக்கியம்.
5. கன்ம சதாக்கியம்.
இவற்றில் கன்ம சதாக்கியமாகி பீடமும், லிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
அவையாவன
1.அவ்வியக்தம்: முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம்.
2.வியக்தம்: முகம் வெளிப்படுவது வியக்தம்.
3.வியக்தாவியக்கம்: அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம்.
4.சுயம்பு லிங்கம்: தானாய் தோன்றிய லிங்கம்.
5.தேவி லிங்கம்: தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.
6.காண லிங்கம்: சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
7.தைவிக லிங்கம்:
மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலு வழிபடப்பட்ட லிங்கம்.
8.ஆரிட லிங்கம்:அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
9.இராட்சத லிங்கம்:இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
10.அசுர லிங்கம்:அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
11.மானுட லிங்கம்:மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
இவை தவிற பரார்த்த லிங்கம், சூக்கும லிங்கம்,ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள் உள்ளன.
பெரிய லிங்கம்:
மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.இது 13.5 அடி உயரமும், அடி சுற்றளவும் கொண்டது.
ஸ்தல இருப்பிடம்:
இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும்.இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர் . இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்
நிவர்த்தி:
பிரமஹத்தி தோஷம் பரிகார தலமாகும் . வில்வார்ச்சனையும் , தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை , மனம் சம்மந்தப்பட்டவை தீரும் . அக உடல் தூய்மையடையும் .