Translate

SHIVA SERIES - சிவபெருமான் மீது முனிவர்கள் ஏன் கோபமடைந்தார்கள் ? Why sages got angry on Lord Shiva?

PUJANGADRASA MOORTHI- புஜங்கத்ராச மூர்த்தி 

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், புஜங்கத்ராச மூர்த்தி  வடிவமும் ஒன்றாகும்.புஜங்கத்ராச மூர்த்தி பாம்புகளை அடக்கிய வடிவாகும்.
 
பெயர்               :புஜங்கத்ராச மூர்த்தி
வாகனம்          :விடம்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்

TIRIKALA NADI ASTROLOGY PUJANGADRASA MOORTHI

விளக்கம்: 

தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும் , அவரது துணைவியர்களோ கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர் . இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான் . பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும் , மோகிணி கோலத்தில் திருமாலும் அவ்வனம் சென்று முனிவர்களின் தவத்தையும் , துணைவியரின் கற்பையும் சோதித்தனர் . இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகினி அவதார மெடுத்த திருமால் என்றும் , கற்பை பரிசோதித்தது பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும் தங்களது தவ வலிமையால் அறிந்தனர் . அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர் . 

அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர் . சிவனே அவற்றையெல்லாம் உடை , சிலம்பு , ஆயுதம் , சிரோ மாலை , சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார் . தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும் , படையாகவும் மாறியதை அறிந்த  முனிவர்கள் பெரும் கோபம் கொண்டனர் . மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர் . 

TIRIKALA NADI ASTROLOGY PUJANGADRASA MOORTHI

அந்த பாம்பு உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய நான்து பற்களில் கடும் விஷத்துடன் சிவபெருமானை அடைந்தது அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில் ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன் சேர்ந்து விடும்படி கூறி சேர்த்தார் . அப்பாம்புகள் அவருடலில் கங்கணம் ( கைவளை , காப்பு ) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து கொண்டு காட்சிக் கொடுத்தார் .  

தாருவனத்து முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர் . ( புஜங்கள் - பாம்பு , திராசம் - பயப்படுதல் ) புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும் . இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார் .இந்த வடிவத்தையே நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம்

தரிசன இடங்கள்: 

புஜங்கத்ராச மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார்.

Team - Tirikala

      

Read also  சிவபெருமான் திருமாலைக் கொன்றாரா? 


                                             2021 © Tirikala Nadi Astrology Center                   

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE