Translate

SHIVA SERIES - அர்த்த நாரிஸ்வர வடிவம் எடுத்ததற்கு பிருங்கி முனிவர் தன் காரணமா ?

 

ARTHANAREESWARA MOORTHI - அர்த்த நாரிஸ்வர மூர்த்தி 

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.  ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், அர்த்த நாரிஸ்வர மூர்த்தி    வடிவமும் ஒன்றாகும். இவ் அர்த்த நாரிஸ்வர மூர்த்தி   வடிவமானது  உமைபங்கன் - உமையை இடப்பாகமாகக் கொண்டவன் வடிவம்.
 
பெயர்              :அர்த்த நாரீஸ்வர மூர்த்தி
வாகனம்         :நந்தி தேவர்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்
 

TIRIKALA NADI ASTROLOGY ARTHANAREESWARA MOORTHI


விளக்கம்:

திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால் , நான்முகன், இந்திரன் என அனைத்தும் தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர் . அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார் .

அனைவரும் பார்வதி தேவியையும் , சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர் . பின்னர் வந்த முனிகுமாரர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல் சிவபெருமானை மட்டுமே வணங்கிய படிச் சென்றார் . 

இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி அவரது உடலிலுள்ள சதையை தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார் . இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார் . சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால் பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் ஒரு காலை முனிவருக்கு வழங்கினார் . 
 
முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி விநாயகன் , முருகன் , சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார்  . 
கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார் . உடன் அவர் தேவி உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் . 
 
உடன் தேவி இறைவா நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை . எனவே தங்களது இடபாகமாக நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள் என்றார் . 

சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார் . வலப்பக்கம் சிவனுமாக , இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தி யாகும் . 

 தரிசன இடங்கள்:

அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருக்கோடாகும் . 
ஈரோடு அருகேயுள்ள இத்தலம் சிவபெருமானுடையது என்றாலும் இளைய பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும் . 

இங்குள்ள இறைவன் பெயர் அர்த்த நாரீஸ்வரர் , இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும் .ஆணாகவும் , பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார் . 
 

Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Saravanan

Team - Tirikala

      

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE