KESAVARTHA MOORTHI - கேசவார்த்த மூர்த்தி
சிவனை
நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்
சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின்
ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம்
அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன்
சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு
திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள்
தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு
அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்,கேசவார்த்த மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் கேசவார்த்த மூர்த்தி வடிவமானது மலோரு பாகர் வடிவம்.
பெயர் :கேசவார்த்த மூர்த்தி
வாகனம் :வலது புறம் நந்தி
இடது புறம் :கருடன்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்
விளக்கம்:முன்னொரு காலத்தில் திருமால் சிவபெருமானை நோக்கி தவமியற்றினார் . சிவபெருமான் திருமாலின் தவத்தினால் மெச்சி என்ன வரம் வேண்டும் ? என்றுக் கேட்டார் .
உடன் திருமாலும் தேவர்களும் , அசுரர்களும் மயங்கத்தக்க மாயை தனக்கு வேண்டும்மென்றும் , தேவர்களும் அழிக்கமுடியாதபடியான வல்லமையும் வேண்டுமென்றார் . சிவபெருமான் கேட்ட வரங்களைத் தந்துவிட்டு திருமாலை மாயன் என அழைத்தார் .
நீயே என் இடபுறமாக இருப்பாய் என்று மறைந்தார் . அத்தகைய வரம்பெற்ற திருமாலே பராசக்தியாகவும் பார்வதியாகவும் ஆணுருக் கொள்கையில் திருமாலாகவும் , கோபமுற்ற நிலையில் காளியாகவும் , போர்க் காலங்களில் துர்க்கையாகவும் விளங்குகிறார் . ஒருமுறை உமாதேவியார் சிவபெருமானை குறித்து சிறந்த தான சோமவார விரதம் மேற்கொண்டார் .
பின் விரதம் முடிந்து அன்னதானம் நடைபெறும் போது அவரது தவச் செயலை நேரில் காண சிவபெருமான் வேதியராகவும் , அவரருகே பெண்ணுருவில் திருமாலும் மாறி , தவச்சாலைக்கு வந்து விரதத்தில் மகிழ்ந்து இருவரும் சுயரூபம் காட்டினர் .
அதாவது சிவம் வேறு , திருமால் வேறல்ல . திருமாலே சிவசக்தியாகும் . ஆண்பாகம் வலதாகவும் பெண்பாகம் இடதாகவும் உள்ளக் காரணத்தால் சிவனிலிருந்து பிரிந்தவரையே நாம் திருமால் என்போம் .
இத்தகைய சிறப்புப் பெற்ற இருவரையும் நாம் எப்படிப் பார்க்கலாமெனில் வலப்புறம் மான் , மழு தாங்கியுள்ளவர் சிவனென்றும் , இடபுறமாக சக்கராதாரியாக உள்ளவர் திருமாலென்றும் அவ்விருவரும் இணைந்துள்ள நிலையை நாம் சங்கர நாராயணன் என்றும் கூறுவோம் .
இத்தகைய சிறப்பான கேசவனைப் பாதியாகவும் , தான் பாதியாகவும் அமைந்துள்ள திருவுருவத்தையே நாம் கேசவார்த்த மூர்த்தி என்போம் .
இத்திருவுருவத்தை அரிகரம் என்னும் இடத்தில் காணமுடியும் .இங்கு நாம் தரிசிக்கப் போவது சங்கர நாராயணனை .நெல்லை
செல்லும் வழியில் உள்ளது சங்கரன் கோயில் . இங்குள்ள இறைவன் சங்கர நாராயணன்
இறைவி கோமதி அம்மையார் .
Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Saravanan