SHIVA SERIES - சிவ பெருமானுக்கு மூன்று பாதங்களை ? Do Lord shiva has 3 pair of legs?
TRIPADATRI MOORTHI - திரிபாதத்ரி மூர்த்தி
வாகனம் : -
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்
விளக்கம்:சிவபெருமானே
மகேஸ்வரனாகி அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர். பின் அனைவரையும் தம்முள்ளே
ஒடுக்கிக் கொள்வர். அவ்வாறு ஒடுக்குவதை நாம்
1) நித்தியம்,
2) நைமித்தியம்,
3)பிராகிருதம்
4) ஆத்தியந்திகம் என நான்காகக் கொள்ளப்படும்.
இவற்றில் நித்தியம் என்றால் உயிரினங்கள் தங்கள் ஆயுளின் முடிவில் சிவனை அடைதலாகும்,
நைமித்தியம் என்றால் நான்முகனின் பகல் கூடிய உலக சஞ்சலத்தால் மறைதல் பிராகிருதம் என்றால் பிரமதேவனின் கால அளவாகும். அதுத்தவிர உலக உயிரெல்லாம் மடிந்து ஓடுங்குதலாகும். ஆத்தியந்திகம் என்றால் உயிரினங்கள் முக்திபெறுதலாகும்.
இதில் நித்தியம் வெளிப்படையானது. இதில் நைமித்தியம் பிரளயத்தின் இறுதியில் ஈரேழு உலகமும் சூரியக்கதிர்களை வாங்கி வெளியிடுவதால் அனைத்துமே பிரகாசமாகும். அதனால் கடல் அனைத்தும் வற்றிவிடும்.
இவ்வாறு நடந்த பின்பு நூறாண்டுகளில் அனைத்து திசைகளிலும்
மழைப் பொழிந்து அனைத்துலகத்தையும் நீரால் நிரப்பும். இக்காலம் பிரமன் யோகநித்தரை
செய்யும் காலமாகும்.
அடுத்து பிராகிருதப் பிரளயம் பற்றி பார்ப்போம். பரமானு இரண்டுடையது அணு, அணு மூன்றுடையது திரிசரேணு, திரிசரேணு மூன்றுடையது துடி, துடி மூன்றுடையது வேதை, வேதை முன்றுடையது லவம், லவம் மூன்றுடையது நிமிடம், நிமிடம் மூன்றுடையது கணம், கணம் ஐந்துடையது காட்டை, காட்டை பதினைந்துடையது லகு, லகு பதினைந்துடையது கடிகை, கடிகை இரண்டையது நாள், நாள் பதினைந்துடையது பட்சம்,
பட்சம் இரண்டுடையது மாதம், மாதம் இரண்டுடையது பருவம், பருவம் மூன்றுடையது அயனம், அயனம் இரண்டையது ஆண்டு, ஆண்டு நூறுடையது மனித ஆயுள், மனித ஆயுள் முப்பதுடையது தென்புறத்தவரின் ஒருசான், மரதம்.
பன்னிரெண்டுடையது தேவர்களுக்கு ஒரு நாள், அத்திகை ஆண்டு பன்னிரெண்டு ஆயிரம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஒரு ஊழி, நான்கு ஊழி கொண்டது பிரமனுக்கு ஒரு பகல்.
இவ்வாறு அனைத்து உயிரினங்களும் சிவபெருமானிடமே தஞ்சம். இதில் மும்மூர்த்திகளும் நேரத்தில் சிவபெருமான் எழுப்பிய கோலமே திரிபாதத்ரி மூர்த்தி யாகும்,அதாவது மூன்று பதமான முர்த்திகளும் இவரிடம் அடக்கம்.
தரிசன இடங்கள்: இவரை திருஇடைமருதூரில் தரிசிக்கலாம்,