Translate

SHIVA SERIES - KAURILILA CAMANVITA MOORTHI

KAURILILA CAMANVITA MOORTHI - கௌரிலீலா சமன்வித மூர்த்தி


சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்,கௌரிலீலா சமன்வித மூர்த்தி வடிவமும் ஒன்றாகும்.கௌரிலீலா சமன்வித மூர்த்தி ப்ரம்மவின் உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம் வடிவாகும்.
 
பெயர்             :கௌரிலீலா சமன்வித மூர்த்தி
வாகனம்        :நந்தி தேவர்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்
 
 
TIRIKALA NADI ASTROLOGY KAURILILA CAMANVITA MOORTHI


விளக்கம்:

திருக்கைலையில் சிவபெருமான் சிங்காசனத்தில் எழுந்தருளியுள்ளார். அப்போது தேவி அருகில் வந்து இறைவா எங்கும் நிறைந்துள்ள தேவருடைய உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும் என்றுக் கேட்டார் அதற்கவர் உருவம், அருவம், உருவஅருவத்துடன் இருப்போம் என்றார் பார்வதிக்கு விளங்காததால் விரிவாகக் கூறலானார்.

நானே உன்னிலும், அனைவரிடத்திலும் உள்ளோம். நானில்லையெனில் அனைவரும் ஜடப்பொருள் ஒப்பாவர் என்றார். அதனை விளக்க அனைத்து உயிர்களின் உள்ளத்தில் சென்று அறிவை மழுங்கடித்து ஜடப் பொருளாக்கினார்.

இதனால் மனம் வருந்திய பார்வதி அவரிடம் மன்னிப்புக் வேண்டி அனைவரையும் நலமுடன் அறிவைக் கொடுக்கச் செய்து, இச்செயலுக்கு பிராயசித்தமாக பார்வதி தேவியார் பூமியில் அவதரித்தார்.  தக்கனின் மகளாக யமுனை நதியோரத்தில் இருந்தார். அதனை தன்மகளாகக் கருதி தக்கன் வளர்க்கலானார் தாட்சாயிணிக்கு வயது ஐந்தானதும் சிவனைக் குறித்து தவமியற்றினார். 

TIRIKALA NADI ASTROLOGY KAURILILA CAMANVITA MOORTHI


இவ்வாறு பணிரெண்டாண்டு கால கடுமையான தவம் மேற்க்கொண்டார். அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேதியராக வேடமிட்டு தவமிருந்த பார்வதி தேவியை மணக்க விரும்புவதாக சொன்னார். பார்வதிதேவியும் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்து உள்ளம் கலங்கினார். பின்னர் சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டினார். 

இவ்விஷயம் தக்கனுக்குத் தெரிந்து சிவபெருமானுக்கும் தாட்சாயிணிக்கும் நல்லநாள், நல்முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்வித்தார்.

திருமணம் நடைபெற்றவுடன் சிவபெருமானும், தேவர் குழாமும் மறைந்தனர், பின்னர் தாட்சாயணி தனது தவச்சாலையில் காலம் கழித்தார். பின்னர் இடபாருடராக வந்து தாட்சாயிணியை திருக்கைலை அழைத்துச் சென்றார்.

 இதனால் தன்னை மதிக்காத சிவன்மேல் தக்கன் பெரும்கோபம் கொண்டவனாக மாறினான். இவ்வாறு திருமணம் செய்த தேவியரை விட்டு மறைந்து பின் வந்து அழைத்த மூர்த்தயே அதாவது கௌரியுடன் சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே கௌரிலீலா சமன்வித மூர்த்தி ஆகும்.

 தரிசன இடங்கள்:

இவரை வழிபட வலங்கைமான் அருகேயுள்ளது பூவனூர் ஆகும். இங்கமைந்த இறைவன் புஷ்டவனநாதர், இறைவி ராஜராஜேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Krishnakumar 

Follow us on Facebook 

Team - Tirikala

     2017 © Tirikala

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE