Translate

SHIVA SERIES - SUKHASANA MOORTHI

SUKHASANA MOORTHI - சுகாசன மூர்த்தி

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.  ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்சுகாசன மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் சுகாசன மூர்த்தி வடிவமானது  உமையன்னை சந்தேகம் தீர்த்த வடிவம். 


பெயர்           :சுகாசன மூர்த்தி
வாகனம்       :ஆயிரங்கால் மண்டபம்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்


Tirikala Nadi astrology SUKHASANA MOORTHI


விளக்கம்:

வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச்செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளது .அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க , அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும் , தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன .

சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார் . நேரம் கடந்தது . அனைவரும் தங்களது பணிக்கு , இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர் . 

சற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின் உண்மைகளை , விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார் . 

உடன் சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும் , ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் , அவற்றை நீக்கினால் கிடைக்கும்

நன்மைகளையும் , சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார் . அச்சமயம் அவர் சுகாசன நிலையில் அமர்ந்த படி உறைக்கிறார் . அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார் .

சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால் இவரை நாம் சுகாசன மூர்த்தி என்கிறோம் . இவரது கரங்களில் மான் , மழு உள்ளது .இடக்காலை மடக்கிவைத்து, வலக்காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார்.

சுகாசனம்:

சுகாசனம் என்பது சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்றாகும். இந்த சுகாசன வடிவத்தில் மூன்று வகைகள் உள்ளன; அவை

1.உமாசகித சுகாசனர்

2.உமா மகேசுவர சுகாசனர்

3.சோமாஸ்கந்த சுகாசனர்

தரிசன இடங்கள்:

இத்தகைய சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும் . இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் பிரம்மபூரிஸ்வரர் , சட்டைநாதர் , தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர் .இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும்.

Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Saravanan

Follow us on Facebook

Team - Tirikala

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE