Rishi Prasanam help to identify the rootcause of this women suffering ? Secret 33
ரிஷி பிரசன்னம் ரகசியம் 33
ஆத்மா ஒன்று உடலுடன் இருந்தாலும், உடலை விட்டு வெளியேறினாலும் அவ் ஆத்மாக்களின் கர்மவினைகளை நிவர்த்திசெய்வதற்கான
வழிகாட்டல்களை கொடுத்து அவ் ஆத்மாவின் கர்மவினைகளை மாற்றும் சக்தியை பரமேஸ்வரன் சித்தர்களுக்கு கொடுத்துள்ளான். அவ் சக்தியானது இன்றும் நம் சித்தர்கள் அறநெறி தவறாத மனு தர்மத்தை
கடைபிடிப்பவர்களுக்கு உதவுகின்றார்கள் என்பதற்கான சாட்சியே இப்பதிவாகும்.
அது ஒரு காலைப்பொழுது குருஜி வழக்கம் போல் தனது பிரசன்னத்தை அன்பர்களுக்கு மேற்க்கொள்வதற்காக தன்னை தயார்படுத்தும் வேளையில், வாசற்கதவில் இருந்து கதிரவனால் அவ்வளவு நேரமும் வாரி வீசப்பட்டிருந்த ஒளி கற்கையானது திடீரென தடைசெய்யப்பட்டு ஒரு இருள் சூழ்ந்தது போல் தோன்றவே அவ் கதவினை நோக்கி குரு தன் கண்களை திருப்பினார், குருவை நோக்கி மூன்று பேரை உள்ளடக்கிய அந்த சிறு குடும்பம் குருவின் உத்தரவிற்காக வாசலிலே காத்திருந்தனர்.
அங்கே வந்திருந்த அந்த தந்தை தாய் முகங்கள் ஏதோ ஒன்றை தாங்கள் தொலைத்து விட்டதாகவும்
அதை இங்கே தேடவந்தாகவும் ஒரு ஏக்கமான பார்வையில் குருவை பார்த்தார்கள். இதை அவர்களது
பார்வையினாலே அறிந்து கொண்ட குரு அவர்களை உள்ளே அழைத்து, வந்ததன் காரணத்தை விளக்குமாறு கேட்கவே அந்த தாயின் கண்களில் இருந்து கண்ணீர் துளி ஒன்று
நிலத்தில் தொப்பென்று விழுந்தது.
அங்கே அவர்களுடன் வந்திருந்த அவர்களது திருநிறை செல்வியான மகள் தனக்கு பல ஆண்டுகளாகியும் எந்த ஒரு பதவி உயர்வும் கிடைக்க இல்லை, தனது தந்தை தாய் தன்னுடன் அன்பாக இல்லை, அதே நேரம் எனது முயற்சிக்கான பாராட்டினை வேறொருவர் பெறுவதாகவும் விடையளித்தாள்.
ஆனால் அவள் பெற்றோர் கூறியபடி
அவர்கள் அவள் மேல் அளவுகடந்த அன்புடன் இருப்பதாக தெரிய வந்தது அதை ஏற்றுக்கொள்ளும்
மனமோ அல்லது அதை அறிந்து கொள்ளும் அறிவோ அவளிடம் தென்படுவதாக இல்லை. அந்த பெண்ணின் மனமானது ஊசலாடிக் கொண்டிருப்பதை குருஜி அறிந்து கொண்டார்.
அதன் பின்னர் குருஜி அவர்களிடம்
ரிஷியிடம் முறையிடுமாறு (ரிஷி பிரசன்னம்) பின்வருமாறு அறிவுரைத்தார். உங்கள் மகளின்
கைப்பட எழுதிய அவள் நாமத்தை, தான் பூஜை செய்யும் நேரத்தில் சித்தர் காலடியில் போட்டு விட்டு செல்லுங்கள் என கூறி குறித்த நாள்
ஒன்றை கொடுத்து அந்த நாளிலே தன்னை மீண்டும் வந்து பார்க்கும் படி உத்தரவிட்டார்.
அதன் படி அவ் பெற்றோர்கள்
தனது மகளால் கைப்பட எழுதிய பெயரினை குரு பூஜை செய்யும் போது
சித்தரின் காலடியில் போட்டு சித்தரை வணங்கி
குருவிடம் இருந்து விடையளித்தார்கள்.
குருஜி சொன்ன அந்நாளும் வரவே அந்த பெற்றோர்கள் தனது மகளை அழைத்து குருவின் தலத்தை அடைந்தார்கள். வந்த அவர்களிடம் குரு, சித்தர் உன் மகளுக்கு எந்த ஒரு விடயமானாலும் நான்கு மாதம் கழித்துதான் முன்னேற்றம் அடைய முடியும் ஏன் என்றால் அவள் சீயானின் (அதாவது அவள் மூன்றாம்பாட்டன் )தங்கை ஆனவள் ஒரு விபத்தின் மூலம் மரணித்துள்ளாள், அவளது ஆத்மா இன்று வரைக்கும் சாந்தி அடையாமல் தனது குடும்பத்தை சுற்றி அலைகின்றது.
இதனாலே எந்த ஒரு நற்கரியங்களும் நடைபெறவில்லை நடக்கும் அணைத்து காரியங்களிலும் தடங்கல், முன்னேற்றத்திற்கு தடை விளைவிக்கிறது என்று மூல காரணத்தை விளக்கினார். இவ்வாறு நடந்த சம்பவத்தை பற்றி குருஜி முதலில் சொன்னபோது அவள் மொத்த குடும்பமும் ஏற்க மறுத்து குருவிடம் இருந்து விடைபெற்றார்கள்.
அதன் பின் அவர்கள் தங்களது உறவினர்களிடம் இருந்து அவ்வாறான நிகழ்ச்சி நடந்தது என்பதை அறிந்து உறுதிப்படுத்திய
பின்பு மீண்டும் குருவிடம் சரணடைந்தார்கள். இதனையடுத்து குருஜி அந்த ஆத்மாவை நிவர்த்தி
செய்வதற்க்கான வழிகளை பரிந்துரைத்தார்.
தெய்வீக வழிகாட்டலின் ஊடாக உரைத்த அந்த வழிகாட்டலை பின்பற்றி அவர்கள் அந்த ஆத்மாவின் விடுதலைக்கான முறைகளை செய்து அந்த ஆத்மாவின் சாந்திபடுத்துவதற்கான தேவைகளை பூர்த்திசெய்யும் முறைகளை எவ்வித பிழை இன்றி செய்துமுடித்தார்கள். இவ் விடுதலைக்கான முறைகளை சரிவர செய்ததன் பலனால் அந்த ஆத்மா சாந்தியடைந்தது.
இதனை தொடர்ந்து அவர்களின் மகளின் வாழ்க்கையில் சித்தர்களது அருள் கிடைக்கப்பெற்று அவளது வாழ்க்கையில் இன்றுவரை முன்னேற்றத்தை கண்டுகொண்டிருக்கின்றாள்.