Rishi Prasanam Changed the Life path of a Women ? Secret 34
ரிஷி பிரசன்னம் ரகசியம் 34
எந்த ஓர் ஆத்மா தனக்கான பதில்களை
தேடி தன்னை முழு நம்பிக்கையுடன் நாடி வருகின்றதோ அந்த ஆத்மாவிற்கான சிறந்த பதிலை குருஜி
சித்தர்களின் நேரடி தெய்வீக வழிகாட்டலின் ஊடாக கொடுப்பார்கள் என்பதற்கான ஒரு உதாரண
உண்மை பதிவே இது!
36 வயதான அந்த பெண் திருமணம் ஆகியும் தன் கணவனோடு சேர்ந்து வாழாமல் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாள். அன்று அந்த பெண்ணிற்கு, தன் துணையுடனான வாழ்கை ஒத்துபோகாமையின் காரணத்தினால் அவர்கள் விகாரத்து செய்து கொண்டார்கள்.
தனது இரு பிள்ளைகளின்
எதிர் காலம் பற்றிய ஒரு கேள்வி அவளின் மனதை புரட்டி போட, மறுபுறம் அவள் தனது எதிர் காலத்தை ஓட்டுவதற்கான ஒரு நிலையான
வேலை இல்லையென ஒரு அச்சம் கலந்த சிந்தனைகள் எதிர் காலத்தை
நோக்கி செய்வது அறியாமல்
திகைத்து நிற்கும் சூழ்நிலையில் அடுத்தகட்டமாக தனது வாழ்க்கையில் மறுதிருமணம்
செய்யலாமா வேண்டாமா என்ற பல கேள்விகளுக்கு பதில் ஏதும் இன்றி தவித்துக்கொண்டிருந்தாள்.
விவாகரத்து நடந்து சில மாதங்கள் ஆகியும் அவளுக்கான விடை கிடைக்கப்பெறவில்லை. விடைகள் இன்றி தனிமையில் தவிக்கும் அவளிடம் அவள் பெற்றோர் உனதும் உன் குழந்தைகளினதும் எதிர் காலத்தை பற்றி சிந்திக்கவும் என்று கூறவே,
சிறிது அமைதி காத்த அவள் தன் பெற்றோர்களிடம் தனக்கு இதை பற்றி சிந்திக்க அவகாசம் தருமாறு கேட்டுவிட்டு தனது இன்பமயமான குழந்தை பருவத்தை கழித்த தனது அறையினுள் சென்று அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு .
தனக்கான பதிலை எங்கே பெறலாம் என்று சிந்தனையில் மூழ்கினாள். திடீரென அவள் அறையினுள் நுழைந்த அவள் சிநேகிதி அவளிடம் குருவை நாடி அவர் உனக்கான பதிலை தருவார் என அறிவுரை கூறினாள்.
அவள் காதில் ஒலித்த குருஜி மற்றும் சித்தர்கள் என்ற வார்த்தை அவள் அறியாமல் அவளை ஆக்கிரமிக்க, உடனே மனம் தெளிந்தவள் போல் தனக்கான விடையை பெற்றுவிடலாம் என்ற முழு நம்பிக்கையில் குருவின் தலத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தாள்.
குருவின் தலத்தை அடைந்ததும் குருவின் அனுமதிக்காக வாசல் கதவோரம் காத்திருந்தாள். தனக்காக யாரோ தன்னை நாடி வந்திருப்பதை அறிந்த குருஜி உடனே அவளை உள்ளே அழைத்து உனது கேள்விகளை சித்தர்களிடம் முறையிடுமாறு பரிந்துரைத்தார். அத்துடன் அவளது கைப்பட எழுதிய அவள் பெயரினை சித்தரின் காலடியில் போட்டுவிடு செல்லுமாறு கூறியதுடன் அவளுக்கான ஒரு காலத்தை கொடுத்து.
அந்த நாளிலே தன்னை மீண்டும் வந்து சந்தித்து உனக்கான
பதிலை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். குருஜி அறிவுறுத்தியது போல் அவள் முறையாக செய்து விட்டு குருவிடம் இருந்து விடைபெற்றாள். விடைபெற்று தனது வீட்டுக்கு
வந்த அவள் தனக்கான பதில் மிக விரைவாகவே கிடைக்க போகின்றது என்ற சந்தோஷத்தில் அவள் முகமும் அகமும் மலர்ந்து காணப்பட்டது.
குருஜி சொன்ன அந்த திகதியும் வரவே மீண்டும் அவள் குருவை நாடி வந்த அவளிடம் நீ மறுதிருமணம் பண்ணினாலும் உனக்கு அதிகாரபூர்வமான மாங்கல்யம் கழுத்தில் நிற்பதற்கான பலன்கள் இல்லை ஆகவே நீ இன்னொரு திருமண பந்தத்தில் இணைந்தாயானால் உனக்கு மறுபடியும் இதே மாதிரியான பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளே
வரும்
அதற்கு தகுந்தாற் போல் உனது முடிவை நீயே தேர்தெடுத்துக்கொள் என்று கூறிய குரு அதற்கான
வேறு வழிகளையும் அறிவுறுத்திக்கொண்டார். அதன் பின்னர் உனக்கு 14 வயதில் திருமணம் நடைபெற்றதாகவும், உனது 24 வயதின் பிரச்சனைகளையும் சந்தித்திருப்பாய் என்றும் இதுவே ரிஷி மூலம்
உனக்காக கிடைத்த பதில் என்று உரைக்கவே,அதற்கு அந்த பெண்
ஆம் என்று கூறி கண்ணீர் விட்டாள்.
தனக்கான பதிலை சொன்னதை அடுத்து
தனது எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு
இருக்கிறாள் அத்துடன் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் சிறந்த முடிவை
தேர்ந்தெடுத்தாள்.