Nadi Reading miracle's - 31
நாடி இரகசியங்கள் பகுதி-31
ஒரு ஆன்மாவின் கர்மவினைகளை
மாற்றி அமைக்கும் சக்தி சித்தர்பெருமக்களுக்கு உண்டு. அறநெறி தவறா, மனு தர்மத்தை கடைப்பிடிக்கும்
நல்லாத்மாக்களுக்கு அச்சக்தியானது ஏதோ ஒரு வழி மூலம் அவர்களுக்கு கைகொடுத்துதவும். அதற்கு சான்றாக ரிஷி பிரசன்னத்தில் நடந்த சுவாரசியமான பதிவே
இது!
அன்று மாசி மாத தொடக்கம், கண்ணனுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியளிக்கும் மரங்களால் சூழப்பட்ட சிவதல கேணியடியோரம் சில்லென வீசிக்கொண்டு இருக்கும் காற்றின் ஓசையினை கொண்ட அந்திமாலை பொழுதில் பலகடமைகளை தன்வசம் கொண்ட இளம்வயதினையுடைய தந்தை தனது மகனின் மேற்படிப்பை நினைத்து ஆழ்யோசனையில் தன்னை மறந்தவராய் விசாலமான ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். இவ்வளவு நேரமும் மெல்லிய பூங்காகாற்றாக வீசிக்கொண்டிருந்த காற்றின் வேகமானது சற்று விசைகொண்டு வீச ஆலம்பூவொன்று தனது காம்பில் இருந்த பிணைப்பிலிருந்து விடுபட்டு வானை நோக்கி மிதந்து தந்தையின் கையை நழுவவே பாறை தன்மேல் விழுந்தவராய் திகைத்து எழ அவர் கண்முன்னே சிறு தொலைவில் குருஜி தனது அன்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்ட அந்த தந்தை முகம் மலர்ந்தது.
உடனடியாக தந்தை குருஜியை நோக்கி சென்று அவருக்காக காத்திருந்தார். தனக்காக ஒருவர் தன்னை நோக்கி காத்திருந்ததை அறிந்த குரு தன்னோடு இவ்வளவு நேரமும் உரையாடிக்கொண்டிருந்த அந்த அன்பரிடம் இருந்து இனிதே விடைபெற்று இவரை நாடி வந்தார். வந்த குருவிடம் தனது சூழ்நிலைகளை பகிர்ந்து கொண்டதுடன் தனக்கான பதில்களை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என வேண்டிக்கொண்டார்.
குரு அதற்கு உனது வேண்டுதல்களை ரிஷிகளிடம் முறையிடுமாறி பரிந்துரைக்கவே அவ் தந்தை அதற்கான வழிமுறைகளை வினாவ, குரு அதனை பற்றிய அறிவையும் அதன் மஹின்மைகளையும் பின்வருமாறு தந்தையிடம் முன்மொழிந்தார், “உங்கள் மகனின் கைப்பட எழுதிய அவன் நாமத்தை நான் சித்தர்களுக்கு பூஜை செய்யும் போது காலடியில் போட்டுவிடுங்கள், எப்போது உங்கள் மகனின் நாமத்திற்கு உத்தரவு வருகின்றதோ அப்போது நான் உங்கள் மகனிற்கான நாடியினை சித்தர்களிடம் இருந்து கேட்டுரைப்பேன்”.
அதனை அடுத்து மறுநாளே குருஜியின் ஆலோசனைப்படி தனது மகனின் மேற்படிப்புக்காக, விடையறியாத பல கேள்விகளுடன் சித்தரை நாடி, தன் மகனின் பெயரை அவன் கைப்பட எழுதி குருவிடம் அனுப்பிய தந்தை குரு கொடுத்த அந்நாளிலே குருவின் இருப்பிடத்தை வந்தடைந்தார். சித்தரிடம் இருந்து தனக்கான பதிலை எதிர்பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் சித்தரின் உத்தரவையும் அருளையும் எண்ணி ஏங்கி மெய்மறந்திருக்கும் அத் தருணத்தில் அவர் மகனுக்கான சித்தரின் அழைப்பு வரவே ஒருவித தயக்கத்துடன் கூடிய உட்சாகத்தில் சித்தரின் பதில் கேட்க ஆவலுடன் குரு அருகே சென்றார்,
தனதருகே வந்திருந்த அந்த தந்தையை நோக்கி உன் வீட்டில் தினமும் கருவூர் சித்தரை பூஜித்து
வா நீ எண்ணியதெல்லாம் வெற்றி ஆக அமையும் என்று
உரைத்ததுடன் மட்டுமில்லாமல் மேலும் பல ரகசியங்களை
குருவின் மூலம் வாக்குரைத்தது விடைபெற்றார் கருவூர் சித்தர். எனது மகனின் கல்விக்காக வாக்குரைத்த சித்தனே, உன் வாக்குப்படியே ஐயனை
அடியேன் தினமும் பூஜை செய்கின்றேன்
என்று கூறி அவர் தனது மகனுடன் கருவூருக்கு புறப்பட்டார்.
சித்தர் உரைத்த அருள்வாக்கின் படி தனது மகனின் மேற்படிப்புக்கான நிவர்த்திகளை சரியான முறையில் பின்பற்றி செய்வதற்கு கருவூர் சித்தர் சந்நிதியின் இருப்பிடமான பசுபதீஸ்வரர் கோவிலை அடைந்தார்கள். அங்கே தனது மகனை கொண்டு ஆலய சுற்று சூழலை சுத்தம் செய்து ஆலயத்திலிருந்து தனது மகனுடன் சித்தர் சொன்ன நன்கொடை இல்லத்தை நோக்கி பயணித்தார்.
பயணித்த சாலையானது எதிர் எதிர் திசைகளைநோக்கி பிரிந்தன, கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எவ்வித சனநடமாட்டம் இன்றி நிசப்தமாக காணப்பட்ட அத்தருணத்தில் நெற்றியில் திருநீற்றுடனும் கழுத்தில் உருத்திராக்கத்துடனும் கையில் கமண்டலத்துடன் சிவனடியார் ஒருவர் தோன்றி, அவர்களை பார்த்து நீ தேடும் இடத்தினை அடியேன் அறிவேன் என சொல்லி அவர்களை அவ் இடத்தை நோக்கி அழைத்துச் சென்றார். அவ் இடத்தை அணுகும் சமயத்தில் நீ தேடி வந்த இடம் இதுவே எனக் கூறி சிவபக்தர் மாயமானார். இவ் அதிசயத்தை நேரில் கண்ட இருவரும் சித்தரை மனதால் நெகிழ்ந்து சித்தர் சொன்ன நன்கொடை இல்லத்தில் மாணவர்களுக்கான,பாடபுத்தகங்களையும் பேனாக்களையும் நன்கொடையாக கொடுத்துவிட்டு,
அவ்வில்லத்தின் பெரியார்களின் ஆசியை பெற்று தங்கள் இருப்பிடத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்த சிறு நாழிகையிலேயே அவர்களின் காதோரம் நற்செய்தி வந்தடைய, அடுத்தகணமே குருவை நாடி வந்த அவர்கள் அன்றிலிருந்து இன்று வரைக்கும் சித்தர்களை பூஜித்து தங்களுக்கான பதில்களை பெற்று வருகின்றார்கள்.
சித்தர்கள் இப்படி பல மெய் சிலிர்க்க
வைக்கும் சம்பவங்களை வெறும் நாமத்தை கொண்டு நடத்தி வருகின்றார்.
Thanks To Maharishi, Sidhars and Ms.Mithan..