Translate

Rishi Prasanam Help to give Prior Prior intimation of Future ? Secret 32

 நாடி இரகசியங்கள் பகுதி- 32

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் பனை ஓலைகளில் (நாடி) ஒளி வடிவிலும் ஓசை வடிவிலும் சில தெய்வீகச் சின்னங்களின் வடிவிலும் தோன்றி தன் வழி வந்த


Nadi astrology Nadi Prediction Chandrastamam


நாடி வசிப்பவர்களின் கண்களுக்குத் தென்படச் செய்து சில உள்ளுணர்வுகளைக் கொடுத்து யார் வந்து நாடி கேட்க அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினைகளைக் சமன் செய்யுமாறு  பாடல் வடிவில் முக்காலங்களையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார்.

சித்தர்களது  நாடியில் வருகின்ற வாக்கு படி ஒவ்வொரு காரியங்களையும் நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டுதலின் பலனை பெறுவது என்பது உறுதி. அவ்விடயங்கள் மகிழ்ச்சியை தரலாம் அதேநேரம் அவை நமக்கு அதிர்ச்சியையும் தரலாம். இவ் பதிவு சித்தர்களின் நாடியினால் மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் தந்த ஓர் சம்பவத்தை உள்ளடக்கியது.

வாழ்க்கையில் நாம் பிறந்த பலனை அடைய இறைவனால் அருளப்பட்ட சிறந்த செல்வம் குழந்தை செல்வம், அச்செல்வத்தினை அடைவதற்காக தசாப்தங்கள் கடந்தும் ஏங்கி காத்திருந்த தம்பதியினருக்கு சித்தர் நாடி வாக்கினால் அவர்களது முன்ஜென்ம கர்மவினைகளுக்கான வழிகளை கூறி அதை அவர்கள் மூன்று மாதங்களாக செய்து கழித்ததன் காரணமாக,

கர்மா சமனாகி ஒரு மாதத்தில் அவர்கள் சித்தர்கள் வழி நடந்ததன் பயனை அடைந்து இன்று அவர்கள் தந்தை தாய் என்னும் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள். இவ் சம்பவத்தினை  தொடர்ந்து அவன் குருவின் ஒரு அன்பனானான்.

அது ஒரு விடியற்காலை, மலை உச்சியில் இருந்து சூரியன் உற்றுப் பார்க்கின்றது. கதிரவனின்  முதல் கதிர்கள் பூமிக்கு அருள் செய்யத் தொடங்குகின்றது . தனது  கண்களுக்கு முன்பாக, எழுந்திருக்கும் சூரியன் ஒரு புதிய நாளின் வருகையை அறிவிக்கையில் மேகங்கள் அற்புதமான

சூடான ஒளியுடன் ஒளிரும் அந்த தருணத்தை மனம் குளிர ரசித்த அவன் வழமை போல் இன்றும் நாடி கேட்பதற்காக குருவின்  இருப்பிடத்தை நாடினான், குருவிக்கு தனது முதல் வணக்கத்தை தெரிவித்து தான் வந்ததன் நோக்கத்தை சொன்னான். குருவும் அவனுக்கான நாடியை சித்தர் பெருமக்களிடம் இருந்து கேட்பதற்காக தனது பூஜையை தொடங்கவே குருவும் சித்தர் ஐயா காலடியில் உனது நாமத்தினை உன்கைப்பட எழுதிவிட்டு செல்லுமாறு கூறவே 

அவன் அவர் சொன்னபடி தனது பெயரினை ஒரு தாளில் எழுதி சித்தர் காலடியில் வைத்துவிட்டு சென்றார். சித்தரின் உத்தரவுக்காக காத்திருந்தார், அவர் எதிர்பார்த்தது போன்று குரு கொடுத்த அந்நாளும் வரவே அவர் குருவிடம் சென்றார். குரு அவருக்கான பதிலை அளிக்க வந்தார், தன்னிடம் சித்தர் உனது வீட்டில் இன்னும் 3 நாட்களில் இறப்பு ஒன்று நடைபெறப்போவதாகும், அதற்காக உன் மனதை தயார் படுத்து என்று வாக்குரைத்ததாகவும் பதிலுரைத்தார். 

இதனை கேட்ட அடுத்த கணமே அவ் இளைஞனின் இதயத்துடிப்பானது உச்சத்தை அடைந்தது. அழுகையுடன் கூடிய ஒருவித நடுக்கத்துடனான குரலில் குருவிடம் இருந்து விடைபெற்றார். தனது வீட்டை அடைந்த அவர் தன் மனதை நடக்கப்போகும் அத் துயர் சம்பவத்திற்காக தயார் படுத்திக்கொண்டான். சித்தர் வாக்குரைத்த 18 மணித்தியாலங்களில் அவர் காதருகே அவ் துயர் சம்பவம் எட்டிப்பார்த்தது, அது சித்தர் உரைத்தவாறு நடந்த அவ் மரணம் அவர் மனைவியின் தாயாரின் பிரிவே!

இவ் துயர் சம்பவம் அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி ஒருமாதம் கழிந்தபின் அவர் மீண்டும் குருவை நாடி வந்தார். வந்த அவர் குருவிடம் நடந்ததை கூறி மீண்டும் தான் வந்ததற்கான காரணத்தை கூறவே குருவும் சித்தர்களின் நேரடி வழிகாட்டலின் ஊடாக ஒரு ஓலை சுவடியை எடுத்தார். அதிலே ஒரு நாயின் உருவம் காணவே, அதனைப்பார்த்த சுவாமிகள் உன் வீட்டில் இருக்கும் வயதான நாய் சுகயீனமுற்று  இருப்பதால் அது இன்னும் ஒரு வாரத்திற்குள் மரணித்துவிடும், 

உனக்கு பிறக்க போகும் பிள்ளைக்கு காலங்களை தன் வசம் கொண்ட காலபைரவரின் அருள் கிடைக்க விரைவில் ஒரு நாய்க்குட்டிக்கு  ஏற்பாடு செய்து வளர்க்குமாறு எடுத்துரைத்தார். இதனை அடுத்து அவரும் குருவின் ஆலோசனைப்படி உடனடியாக ஒரு நாய்  குட்டியினை வாங்கி வளர்த்ததன் பயனாக அவனது பிள்ளைக்கு காலபைரவரின் அருள் கிடைக்கப்பெற்றது.

இவ்வாறு அந்த இளைஞன் இன்றும் குருவின் உதவியுடன் சித்தர்களிடம் இருந்து தனக்கான பதில்களை பெற்று வருகின்றான்.

சித்தர்களின் தர்ம நெறி தவறாதவர்களுக்கு நாடி மூலம் சித்தர்கள் அருள அவர்கள் முகமோ, பிறந்த நேரமோ அல்லது இடமோ தேவை இல்லை! சித்தர்கள் அவ் நெறிதவறாதவர்களுக்கான  தர்மப்பயனை சமன் செய்ய உதவுவார்கள்.Team - Tirikala

      

INTEREST TO KNOW MORE ?


                                             2021 © Tirikala Nadi Astrology Center          

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE