SHIVA SERIES - LINGODBHAVAMURTI -AC
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், லிங்கோத்பவர்மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் லிங்கோத்பவர்மூர்த்தி வடிவமானது பிரம்மன் மற்றும் திருமால் அகந்தை அழிக்க சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றிய வடிவம்.
பெயர்: லிங்கோத்பவர்
வாகனம்: நந்தி தேவர்
அதனால் உலகம் மறைந்து விட்டது . திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன் உறங்கினார் . இதனை கண்ணுற்ற அனைவரும் குழந்தையை ஆராதித்தனர் . ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார் .
அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார் . உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார் . பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார் .
இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல் ஆரம்பமானது . அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார் . இடையில் ஏற்பட்ட சம்பவம் தெரியாததால் ,
இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார் . தானே முழுமுதற்கடவுள் என்ற எண்ணத்துடன் உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில் திருமால் இருப்பதைக் கண்டு அவரிடம் சென்று நீ யார் ? என வினவினார் .
அவரோ நான் உனது தந்தை என்றார் . இதனால் பெரும் வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டது . அது யார் பெரியவர் என்றளவில் பெரும் போரானது . இப் போரினால் உலக உயிர்கள் அனைத்தும் வாடின . உடன் நாரதர் தோன்றி நீங்களிருவருமே பெரியவர் கிடையாது .
சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர் என்றுரைத்தார் . மேலும் இனியும் போர் தொடர்ந்தால் ஜோதிரூபமாக சிவபெருமான் தோன்றுவார் என்று கூறி மறைந்தார் . இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது .
சிறிது நேரத்திற்குப் பின் பெரும் ஜோதி தோன்றியது , அதிலிருந்து அசரீரீ கேட்டது . உங்கள் இருவரில் எவர் எனது அடியையும் , முடியையும் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று அசரீரீ கூறியது .
உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட , திருமால் வராகமாக மாறி அடியைத் தேட இரண்டுமேக் கிடைக்கவில்லை . இருவரும் சிவனே சரணம் என்று சிவனை அடைந்தனர் . மனம் வருந்தினர் . உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர் .
உடனே சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும் , நான்முகன் என் வலதுபுறத்திலும் , திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார் . வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது . அதுவே திருவண்ணாமலையாகும் . அவர்கள் இருவரும் வணங்கிய சிவலிங்கமே லிங்கோர்பவர் ஆகும் .
தோற்றம்:சிவாலயங்களின் கருவறையில் பின்புறம் நின்ற திருக்கோலத்தில் சோதிப்பிழம்பாக அடியும் முடியும் காணவொண்ணாதவாறு இருக்கும் இச்சிவமூர்தத்தின் அடியில் வாரக மூர்த்தி வடிவத்தில் திருமாலும் ஈசன் முடியில் அன்னபட்சி வடிவில் நான்முகனும் காணப்படுவர். சிவராத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் இடம்பெறும்.சிவனுக்குரிய 64 வடிவங்களில் ஒன்று அண்ணாமலையார். 'லிங்கோத்பவ மூர்த்தி' என்றும் குறிப்பிடுவர்.
திருவண்ணாமலை:இருவரும் சிவனே சரணம் என்று சிவனை வணங்கினர். உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும் "நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எனக்கு இருவரும் ஒன்றே உயர்வு தாழ்வு கிடையாது" என்றுக் கூறி மறைந்தார்.
வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும்.
இந்த திருவுருவ மேனி தத்துவத்தை உணர்த்துவதே அண்ணாமலை கோவிலில் அக்னியின் ரூபமாக லிங்கோத்பவர் நின்ற இடத்தில் வருடம் தோறும் நடைபெரும் "அண்ணாமலை ஜோதி" விழா இதை நினைவு கூறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிக்குரிய ஸ்தலமாகும்.
கடைசியில் வரும் வரிகள் அருமையாக இருக்கும். "நேற்று வந்த துன்பம் இன்று விலகவும், நாளை நேருகின்ற வாழ்வில் இன்பம் பெருகவும்" என்ற வரும். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வின் துயரம் விலகி இனி வாழ்வில் இன்பம் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.
Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Saravanan