Translate

SHIVA SERIES - MUKHALINGA MOORTHY - AC

MUKHALINGA MOORTHY - முகலிங்க மூர்த்தி

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும். சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.  ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், முகலிங்க மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் முகலிங்க மூர்த்தி வடிவமானது  ஐந்து முகத்துடன் உள்ள வடிவாகும்.

பெயர்: முகலிங்க மூர்த்தி
வாகனம்: நந்தி தேவர்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்


விளக்கம்: சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம்  லிங்கத்திருமேனியில் சிவ முகம் இருப்பதை முகலிங்க மூர்த்தி என்கிறோம். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது.

பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவர் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாக தரிசிக்க முடியும்.
      • ஆட்யம்,
      • அநாட்யம் ,
      • சுரேட்டியம் , 
      • சர்வசமம் என்பனவையாகும் . 

இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது . சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது . அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும் . ஈசானம் , தத்புருடம் , அகோரகம் , சத்யோஜாதம் , வாமம் என ஐந்தும் அடங்கும் .

முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது . பிரம்ம , விஷ்ணு , ருத்ர , மகேஸ்வர , சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது . 

இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர் . இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாக தரிசிக்க முடியும் . 

தரிசன இடங்கள்:

முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது . 

  1. திருவக்கரை
  2. கச்சபேஸ்வரர் 
  3. கொட்டையூர்

இதில் திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்கமூர்த்தி சிறப்பு பெற்றது . எப்படியெனில் சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சிக்கொடுக்கிறார் . 

நிவர்த்தி:

இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர் , இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை கண்டிப்பாள் என்று நம்பிக்கை நிலவுகிறது .

மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும் , சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி . மேலும் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது . 

மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள கொட்டையூரில் உள்ளது . இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர் . அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம் .

Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Saravanan.

Team - Tirikala

      

Read also  SHIVA SERIES - LINGODBHAVAMURTI


                                             2021 © Tirikala Nadi Astrology Center        

Popular posts from this blog

LIME GARLAND - ELUMICHAI MALAI - KANNI MALAI

Tirikala's - TEMPLE ROUTE MAP - KUMBAKONAM TO THIRUVAIKAVOOR

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE