SHIVA SERIES -SADASHIVA MOORTHY -AC
SADASHIVA MOORTHY -சதாசிவ மூர்த்தி
இடக்கையில் நாகம் , பாசம் , நீலோற்பலம் , அங்குசம் , டமருகம் , வரதம் , மணிமாலை , பரிவட்டம் எனக்காணப்படும் . இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர் . மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர் . இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும் , மேற்கே ஈசனும் , வடக்கே பிரமனும் , தெற்கே திருமாலும் , கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர் .
கன்மசா தாக்கியம்:
இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம் . இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார் . சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார் . இந்த மூர்த்தி தயோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளி கெளசிக, காசிப, பாரத்வாஜ, கெளதம, அகத்தியர் ஆகிய முனிவர்களுடைய தவத்திற்கு வேண்டியதை அருளினார்.
முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத முகத்திலிருந்து காமிகம் , யோகசம் , சிந்தியம் , காரணம் , அசிதம்என்னும் ஐந்து ஆகமங்களை அருளினார் . காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம் , சூக்குமம் , சகச்சிரம் , அஞ்சுமான் , சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார் .
பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம் , நீச்சுவாசம் , சுவயம்புவம் , ஆக்நேயம் , வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார் . கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம் , மகுடம் , விமலம் , சந்திரஞானம் , முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார் .
முடிவில் அகத்தியருக்காக ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம் , இலளிதம் , சித்தம் , சந்தானம் , சர்வோக்தம் , பரமேச்சுவரம் , கிரணம் , வாதுளம் எனும் எட்டு ஆகமங்களையும் அருளினார் .
தரிசன இடங்கள்:
இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும் .இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன . இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார் .
நிவர்த்தி:
இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய , அர்ச்சித்த பலன் கிடைக்கும் .
மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம் . இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்.