Translate

ரிஷி பிரசன்னத்தில் சித்தர்கள் சொன்னதை கேட்டு வாழ்வை மாற்றி கொண்ட வாலிபன் - ரகசியம் 35

ரிஷி பிரசன்னம் ரகசியம்  35

சித்தர்களிடம் சரணடைந்தால் தலையெழுத்தை மாற்றி கொள்ளலாம் என படித்தும், அறிந்தும் இருக்கின்றோம். இதற்கு சான்றாக குருவிடம் வந்து ரிஷி பிரசன்னத்தில் சித்தர்கள் சொன்னதை கேட்டு வாழ்வை மாற்றி கொண்ட ஒருவரின் அனுபவத்தை உள்ளடக்கிய ஓர் உண்மை சம்பவமே இந்த பதிவு.

வேறு பல வேலைவாய்ப்புக்கள் கிடைத்த போதும் தான் விரும்பும் துறை சார்ந்த தொழிலிற்காக பல வருடங்களை கடந்தும் அந்த வேலைவாய்ப்பிற்காக பல தேர்வுகள் பல  முயற்சிகள்  செய்து கொண்டிருக்கும்.

Nadi Astrology near me ,Tirikala nadi astrology, shivanadi, online nadi astrology


அந்த வாலிபன் தனது எந்த முயற்சிகளும் பலன் அளிக்காத காரணத்தினாலே 2019  ஆம் ஆண்டு மாசி மாதம் 24 ஆம் திகதி  அன்று அவன் குருவிடம் ரிஷி பிரசன்னதினூடாக தனது வேலை பற்றிய விடைகளை சித்தர்களிடம் இருந்து பெறுவதற்காக குருவை சந்தித்து விண்ணப்பம் செய்வதற்காக வந்திருந்தான்.
விண்ணப்பித்து குருஜி சொன்ன அந்த நாளும் வரவே அவன் குருஜியின் தலத்தை அடைந்தான். 

அவனிற்கான விடைகளை சித்தர்களிடம் இருந்து கேட்ட பொழுது, அவனின் தொழில் பற்றிய எந்த ஒரு விடயங்களையும் குறிப்பிடாமல் அவருடைய ஏனைய வாழ்க்கை விவரங்களை பற்றி கூறினார்கள். ஏன் தனது தொழில் பற்றி எதையும் தாங்கள் கூறவில்லை என குருவிடம் அந்த இளைஞன் வினவினான். அதற்கு குரு ஒரு சிறு புன்னகையுடன் “யான் சித்தன் என்னிடம் எதை நோக்கி வழிகாட்டுகின்றானோ அந்த வழிகாட்டல்களின்படிதான் ஐயன் உனக்காக படிப்பது மற்றும் எழுதி கொடுப்பது.

எழுதி கொடுப்பதில் ஏதும் உனக்கு புரியாவிடின் அதைப்பற்றிய விளக்கத்தை உன்னிடம் தெளிவு படுத்துவேன் ஆனால் எழுதியவற்றில் உன்னக்கான விடை கிடைக்க பெறாவிடின் அதற்கான கரணம் சித்தனே அறிவான்! 

ஆகையால் நீ சித்தர்களை முழுமையாக நம்பி முதலில் அவர்கள் உனக்கு கூறிய வழிமுறைகளை சரியாக செய்து விட்டு மறுபரிசீலனை செய்து  பார்க்கும்பொழுது விவரங்கள் கூறுவார்கள். ஆகவே நீ உனது நம்பிக்கையை மட்டும் கைவிட வேண்டாம் என குருஜி அவனுக்கு எடுத்துரைத்து அவனை வழியனுப்பினார்.
அந்த இளைஞனும் குருஜி அறிவுரைத்தவாறு  சித்தர்களை முழுமையாக நம்பி அவர் பரிந்துரைத்த  வழிமுறைகளை  எவ்வித தவறும் இன்றி சரியாக முடித்து குருஜியிடம் மறு சந்திப்பிற்காக அதாவது நான்கு மாதங்கள் கழித்து  நாடினான் மறு பரிசீலனையில் போது சித்தர்கள், இவன் செய்த பரிகாரம் முற்றுப் பெற்று விட்டது என்பதை கூறிக்கொண்டு.

அடுத்ததாக  இவருக்கு திருமணத்திற்கான விவரங்களை கூறினார்கள் அதாவது அவருடன்  திருமண பந்தத்தில் இணையப்போகும் பெண்ணின், ஊர், பெயர் மற்றும் வேறு பல விபரங்களை கொடுத்ததுடன் அவரின் எதிர்காலத்தில்   அவருடன் பழகப்போகும்  உறவினர்கள்,  யாரெல்லாம் வந்து உதவுவார்கள், அவர்களின் பெயர்கள் போன்ற விபரங்களை கூறி விடைபெற்றார் சித்தர். அந்த இளையனுக்கோ , ஒன்றும் புரியவில்லை ஏனெனில், அவனுக்கு வாழ்வை நகர்த்தி செல்வதற்கோ  வேலையேயில்லை, 

அதோடு சொல்லிக்கொள்ள எந்த சொத்து பத்தும் இல்லை அதைவிட அவன் குறிப்பிடு சொல்வதற்கோ எந்த  உறவுகளும் இல்லை ஏனெனின்  சித்தர்கள் எதிர்காலத்தில் அவருக்கு உதவப்போவதாக கூறிய  உறவுகள் பேச்சுவார்த்தைகள் கூட இல்லாதவர்கள். 

இப்படி பல கேள்விகளுக்கு விடை அறியாது குழம்பியபடியே அவர் குருவிடம் அவன் குழப்பத்திற்கான காரணத்தை வினாவவே திரும்பவும் அவனிடம் முதல் கூறியவாறே மீண்டும் எடுத்துரைத்து சித்தர்களை நம்புங்கள், தலையெழுத்து மாறும் என்று கூறி அவனிடம் இருந்து விடைபெற்றார்.

அதன் பின்னர் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் குருவை நாடி வந்தான் அவன். வந்த அவன் குருவின் காலில் விழுந்து அவர் ஆசீர்வாதங்களை பெற்றுவிட்டு, அன்று நான் உங்களிடம் இருந்து குழப்பமான மனநிலையிலே வீடு திரும்பினேன். நான் நீங்கள் எழுதித்தந்ததை திரும்ப, திரும்ப படித்து பார்க்கும்பொழுது அவை புரிந்தும், புரியாத நிலையிலேயே இருந்தேன்.

அதன் பின் ஒரு மூன்று நாட்கள் கழித்து சித்தரை வணங்கிய பின்  மறுபடியும் அதை படிக்கும்பொழுது ஒரு வாசகம் கண்ணில் பளிச்சென்று தெரிந்தது அதில் ஒரு உறவினரின் பெயரை சொல்லிக் குறிப்பிட்டு அவரை நாடினாயானால்  நீ எண்ணியதை விட மேலான வாழ்வு  உன்னை நோக்கி வரும் என்பதே அது.

அவரோ அவனின் உறவினர் என்பதை  தவிர வேறொன்றும் தெரியாது. நன்கு சிந்தித்த பின்பு மனதில் ஒருவித துணிவை வரவழைத்து  மனப்பாரங்களை சித்தர்களிடம் ஒப்படைத்து விட்டு சித்தர்கள் உரைத்தவாறு அந்த உறவினரை கண்டு பிடித்து, அவருடைய இல்லத்திற்கு சென்றேன். அந்த உறவினர் வீட்டில் என்னை பல நாட்கள் பார்த்து நன்கு பழகியவர்கள் போல, கைபிடித்து வரவேற்று உபசரித்தார்கள்.

அந்த உறவினர் வீடு சென்ற அவனிடம் தங்கள் உறவு பிரிந்த காரணங்கள் , தங்கள் குழந்தை பருவ இன்பமான தருணங்கள் என இன்பம் துன்பம் கலந்த கதைகளை கூறிய அந்த உறவினர் இறுதியில் அவனுக்கு வேலை இல்லையென்பதையும் திருமணம் ஆகவில்லை என்பதையும் அறிந்துகொண்டு சிறு உரையாடல்களின்.

பின்னர் அந்த உறவினர் அவனை வழியனுப்பி மறுநாள் காலை அவனது வீட்டிற்கு வருகை தந்து அவன் தாயுடன்  பலமணிநேரம் உரையாடிய பின்னர் அவனை தனது வீட்டில் இருந்து 2 -3 தெருக்கள் கடந்து உள்ள வீட்டில் பெண் பார்க்க சென்று அவனை அதிர்ச்சில் ஆளாக்கினார். 

வேலையோ சொத்தோ இல்லாத அவனை அந்த பெண் வீட்டார் முழு மனதோடு தங்கள் மாப்பிள்ளையாக சம்மதிக்கவே அவனும் எந்த ஆமோதிப்பும் இன்றி அந்த திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவே அவர்களுக்கு பெரியவர்களின் ஆசியுடன் சம்பிரதாயப்படி திருமணம் நடைபெற்றதாக கூறினான்.
அதனை தொடர்ந்து காலத்தின் பலனால் தனது சின்ன மாமனாரை சென்னைக்கு சென்று சந்திக்கவே அவரே தனது கனவு தொழில்துறையின் தலைவர் என்று அறிந்துகொண்டான், அவரிடம் இருந்த அந்த தொழிலின் எதிர்மறைப்பக்கங்களை அறிந்தும் அதை ஏற்க மறுத்தவனாய் அவனுக்கு அவரே வேலை வாய்ப்பை கொடுத்ததாகவும் முதலில் விருப்பத்துடன் செய்த அந்த வேலை.

சில மாதங்களிலே அந்த வேலைமேல் வெறுப்பு ஏற்பட்டு தனது மாமனாரின் சொத்தை பராமரிக்கும்  வேலையை கவனிக்க தொடங்கவே, அந்த வேலை அவனுக்கு அந்த வேலையின் மீதான அறிவும் ஆர்வமும் கூடவே தனக்கான ஒரு சொந்த தொழிலை தொடங்கி அதில் வெற்றி அடைந்து.

அவன் வாழ்கை முழுமையடைந்ததாக கூறினான். இவற்றையும் கூறிய அவன் குருவை நோக்கி தற்போது தான் உங்களை நாடி வந்ததன் காரணம் ஏன் என்பதை பின்வருமாறு உரைத்தான்.
"சித்தர்கள் பற்றி தான் புத்தகங்களிலும், ஒரு சிலர் விவரங்கள் சொல்லவும் கேட்டிருக்கேன். ஆனால் சித்தர்களை நம்பி வாழ்க்கையை ஒப்படைத்த என்னுடைய  தலையெழுத்தை கையெழுத்தால் மாற்றிய அதிசய செயலை என்னால நம்பாமல்  இருக்க முடியவில்லை.. ஏனென்றால் அவரை நாடி வந்து அவர் வழிகாட்டலை பின்தொடர்ந்ததன் அப்பால் இன்றுவரை  சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன். 
அன்று எனக்கு கிடைக்காத பதில் இன்று கிடைத்தது அதில் தன்னுடைய  முயற்சி என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை அதோடு எனக்கு பிடித்த வேலையை எனது முயற்சியினால் கிடைத்து இருந்தால் எனது வாழ்க்கை கஷ்டமானதாக மாறியிருக்கும் அதோடு யாரும் இந்த வேலை உனக்கு பொருத்தமானதாக இருக்காது என்று கூறியிருந்தால் கூட நான் அதை ஏற்க மறுத்திருக்கலாம்.

ஆனால் நான் இப்போது அனைத்தையும் அனுபவப்பட்டு இன்று எனது கிடைப்பதற்கு அரிய இந்த அற்புதமான வாழ்க்கையில் ஆனந்தமாய் உள்ளேன் எல்லாம் சித்தர்களின் வழிகாட்டலும் அவர்களின் நல் ஆசிர்வாதமும் தான். ஆகவே இதை அனைத்தையும் உங்களிடம் கூறி உங்கள் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளவே இன்று வந்தேன்" என கூறி குருவின் ஆசிர்வாதங்களை பெற்று குருஜியிடம் இருந்து விடை பெற்றான்.

இந்த அன்பரை போன்று அனைவருடைய வாழ்விலும் சித்தர்கள் தங்களிடம் சரணடைந்தவர்களை எப்பொழுதும் கைவிடாமல் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார்கள்.

Team - Tirikala

      




                                             2021 © Tirikala Nadi Astrology Center     

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE