Translate

நாம் நினைத்த காரியங்கள் இனிதே நடைபெறும் - நாடி ரகசியம் 36 I Nadi Reading secret -36

 நாடி ரகசியம் 36

சித்தர்களை நமது வேண்டுதல்களுக்காக சரணடைந்த நாம் அவர்கள் பரிந்துரைக்கும் வழிகாட்டல்களை சாதாரணாக எண்ணிவிட கூடாது. நாம் அவர்கள் கூறும் வழிகாட்டல்களை  எவ்வித சந்தேகங்களோ தாமதங்களோ இன்றி சரிவர செய்தோமேயானால்  நாம் நினைத்த காரியங்கள்  இனிதே நடைபெறும் என்பதற்கான சான்றே இந்த பதிவு.


Tirikala, nadi astrology Near me , astrology remedies karma solution,shivanadi, astroved, astrospeak,shivanadi,astrology solutions  for job marriage


அன்று பங்குனி மாதம் 2 ஆம் திகதி 2019 , சென்னையில் சொந்தமாக தொழில் ஒன்றை நடாத்தும் ஒரு தொழிலதிபரான அந்த தந்தை தனது மகளுடன் குருவின் இருப்பிடத்திற்கு வந்திருந்தார். அவர்களை அழைத்த குருஜி அவர்களின் வருகைக்கான காரணங்களை வினாவவே

தனது மகளின் மாங்கல்ய பேற்றிக்காக குருவை நாடி வந்ததாகவும், தனது மகளுக்கு பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் சின்ன சின்ன விடயங்களால் அவள் மாங்கல்ய பேறு பின்னோக்கி செல்கின்றது அதற்கு தாங்களே நல் வழிகாட்டல் ஒன்றை காட்ட வேண்டும் என்று குருவை நோக்கி கேட்டார். குருவும் நீ சித்தர்களிடம் உனது வேண்டுதலை முறையிடு அவர்கள் உனக்கான வழிகாட்டலை அருள்வார் என்று உரைத்து

உனது மகளின் கைப்பட எழுதிய பெயரினை நான் சித்தர்களுக்கு பூஜை செய்யும் நேரத்தில் அவர்களின் காலடியில் போட்டுவிட்டு செல் உனது மகளுக்கான நேரம் வருமிடத்தே அவளுக்கான சித்தர்களின் பதிலை கேட்டுரைப்பேன் என கூறி அவர்களின் மீள்வருகைக்கான ஒரு திகதியை கொடுத்தார், உடனடியாக அந்த தந்தையும்  தனது மகளின்  பெயரை அவளை கொண்டு எழுதி அந்த தாளினை  குரு பூஜை செய்யும்  நேரத்தில் சித்தர்களின் காலடியில் போட்டுவிட்டு சித்தரை வணங்கி விடைபெற்றார்கள்.

குருஜி அந்த தந்தையிடம் சொன்ன அந்த நாளும் வரவே அவர்கள் குருவிடம் சென்று திருமண தாமதங்களுக்கான விடைகளை கேட்டார்கள். குருஜி தந்தையிடம் அவர் மகளின் திருமணம் தாமதம் அடைவதற்கான காரணத்தை கூறி அதை சமப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை பரிந்துரைத்தார். 

அந்த வழிகாட்டல்களை தான் உடனடியாகவே செய்ய போவதாக கூறி அவர்கள் குருவிடம் இருந்து விடைபெற்றார்கள்.  அதன் பின் சுமார்  10 மாதங்களின் பின் மீண்டு குருவை தனது மகளுடன் நாடி வந்த தந்தை இன்னும் தனது மகளிற்கு திருமணம் நடைபெறவில்லை என சோகமாக கூறி அதற்கான காரணத்தை குருவிடம் கேட்டார். தந்தையின் விடைக்காக குரு மீண்டும் சித்தர்களிடம் அதற்கான காரணத்தை நேரடி தெய்வீக வழிகாட்டல்களின் ஊடாக  கேட்கவே சித்தர் "அவன் இன்னும் தான் பரிந்துரைத்த வழிகாட்டலை செய்துமுடிக்கவில்லை அதனாலே அவன் நினைத்து வந்த காரியம் தடைபடுகின்றது" என்று கூறினார்.

 இதை அந்த தந்தையிடம் உரைக்கவே அவரோ அந்த பரிகாரத்தை தனது கடையில் வேலைசெய்யும் ஒருவரிடம் செய்யும் படி உரைத்ததாக கூறி, அதை அவரிடம் தொலைபேசி ஊடாக உறுதி படுத்திக்கொள்ள அவரை அழைத்த பொழுது அவரோ அந்த பரிகாரத்தை தனக்கு தெரிந்த வேறு நபரிடம் செய்து தருமாறு உரைத்ததாகவும், அவரை தொடர்புகொண்ட  அவன் இன்றும் அந்த நபர் அந்த வழிகாட்டலை  செய்யவில்லை என்னும் செய்தியை தந்தையிடம் கூறவே தான் செய்த தவறினை உணர்ந்தார் அந்த தந்தை. உடனே குருவிடம் தான் தவறிழைத்துவிட்டதாக  சித்தர்களிடமும் குருவுடமும் மனமுருகி மன்னிப்பு கேட்டுவிட்டு  இன்றே அந்த தவறினை சரி செய்வதாக அவர் தனது மகளையும் அழைத்துக்கொண்டு 

அந்த வழிகாட்டலை பூரணபடுத்துவதற்காக சித்தர்களை சொன்ன அந்த கோயிலுக்கு சென்று அந்த வழிகாட்டலை நிறைவுபடுத்தினார்கள். அதனை தொடர்ந்து 90 நாளில் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தனது மகனுக்கு இந்த தொழிலதிபரின் மகளை மணம் முடித்துக் கொடுக்க கேட்டுவரவே, மகளின் திருமண சடங்கை  சித்தர்களின் ஆசியுடன் சமய சம்பிரதாயங்களுடன்  இனிதே நடத்தி முடித்த அந்த தந்தை இன்று தனது மகளின் சந்தோஷமான வாழ்விற்கு அருளும் ஆசியும் கொடுத்த சித்தர்களை தான் இன்றுவரை வணங்கி வருவதாக கூறினார்.

நாம் ஒருதடவை சித்தர்களின் உண்மையான அன்பர்கள் ஆனோமேயானால் சித்தர்கள் என்றும் எமக்கு துணையாக இருப்பார்கள்!.

Team - Tirikala

      




                                             2021 © Tirikala Nadi Astrology Center     

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE