Translate

SHIVA SERIES - திருமால் கருடனுடன் போரிட்டு வெல்ல முடியவில்லையா? Lord Thirumal not win the battle with Garuda?

 BHUJANGALITHA MOORTHI - புஜங்கலளித மூர்த்தி

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்,புஜங்கலளித மூர்த்தி வடிவமும் ஒன்றாகும்.புஜங்கலளித மூர்த்தி பாம்புகளை காத்து அருளியாவடிவாகும்.
 
பெயர்              :புஜங்கலளித மூர்த்தி
வாகனம்         :விடம்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்


TIRIKALA NADI ASTROLOGY BHUJANGALITHA MOORTHI

விளக்கம்:

காசிப முனிவரின் மனைவியரான கத்துருவிற்கும் , வினந்தைக்கும் தங்களில் அடிகானவர் யார் என்றப் போட்டி ஏற்பட்டது . அப்படி அழகானவள் மற்றவளை சிறையில் அடைக்க வேண்டும் என்ற முடிவுடன் கணவரான காசிபரை நாடினார் . கணவரோ கத்துருவே அழகி என்றுக்கூறினார் , இதன் விளைவாக வினத்தை சிறையில் அடைக்கப்பட்டார் . 
 
தன்னை விடுவிக்கும் படி கத்துருவை வேண்டினாள் . கத்துருவோ தனக்கு அமிர்தம் கொடுத்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்றார் . உடன் வினந்தை தன் மகனான கருடனின் வனத்திற்கு இதைக் கொண்டு சென்றார் . கருடனும் தேவலோகம் சென்று போரிட்டு அமிர்தத்துடன் செல்லும் போது திருமால் கருடனுடன் போரிட்டு வெல்ல முடியாமல் பறவை ராஜனே உன் பெருமைகளைப் போற்றினோம் , 
 
உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார் . கருடனே பதிலுக்கு திருமாலே உன் வலிமையை கண்டுகளித்தேன் நீ உனக்கு வேண்டிய இரண்டு வரங்களை கேள் என்றார் . திருமாலும் இதுதான் சந்தர்ப்பமென தனக்கு வாகனமாக இருக்க வேண்டியும் , அரவங்களுக்கு அமுதம்

TIRIKALA NADI ASTROLOGY BHUJANGALITHA MOORTHI


கொடுக்காதிருக்கவும் வரம் வாங்கினார் கருடனும் அதற்கிசைந்து கொடுத்து விட்டு அமுதத்துடன் சிறைக்கு வந்து தாயிடம் கொடுத்தார் . பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றுப் பின்னர் அன்று முதல் திருமாலின் வாகனமானார் . மேலும் கருடன் திருமாலிடம் பெற்ற வரத்தினால் மற்றொரு தாயான கத்துருவின் கட் செவிகளைக் கொன்று கொடுமைப் படுத்தினார் . இதனால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு இறவாபுகழும் , கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர் . 
 
உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில் ஆபரணமாக அணிந்து கொண்டார் . இதனையே நாம் என்ன கருடா சௌக்கியமா என நாகங்கள் கூறுவதாக கொள்வோம் அதற்கு என்ன பொருளெனில் சிறியோரை கூடுதலைவிட பெரியோரைச் சேருதலே சிறந்தது என்பதாகும் . பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது . ( புஜங்கம் - நாகம் , லளிதம்- அழகு , ஆபரணம் ) 
 
தரிசன இடங்கள்:
 
புஜங்கலளித மூர்த்தியை நாம் தரிசிக்க கல்லனை அருகேயுள்ள திருப்பெரும்புலியூர் செல்ல வேண்டும் . சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் என்பதால் சிறப்பு பெற்றது .

Team - Tirikala

      

Read also  SRI ABATH SAGAY ESWARAR TEMPLE - ADUTHURAI


                                             2021 © Tirikala Nadi Astrology Center                   

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE