Translate

SHIVA SERIES - பிரம்மா சிவபெருமானை இகழ்ந்துப் பேசியதின் விளைவு என்ன ?

 BRAHMA SIRACHEDA MOORTHY - பிரம்ம சிரச்சேத மூர்த்தி   

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும். சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன். 

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.  ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்,பிரம்ம சிரச்சேத மூர்த்தி   வடிவமும் ஒன்றாகும்.இவ் பிரம்ம சிரச்சேத மூர்த்தி  வடிவமானது ப்ரம்மவின் தலையை கொய்த வடிவமாகும்.

பெயர்                : பிரம்ம சிரச்சேத மூர்த்தி
வாகனம்           :நந்தி தேவர்
மூர்த்த வகை  : மகேசுவர மூர்த்தம்

 

விளக்கம் :

ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகளுடன் படைக்கும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால் பிரம்மனுக்கு கர்வம் மேலிட்டது. மேருமலையில் இருக்கின்ற உயர்ந்த சிகரமொன்றில் திருமாலும், பிரம்மனும் வீற்றிருந்தனர். அப்போது எண்ணற்ற முனிவர்களும், தேவர்களும் அங்குவந்து இருவரையும் தாழ்மையுடன் வணங்கி அவர்களிடம் உலக உயிர்கள் அனைத்தின் மனதிலும் இருப்பவர் யாரென்றுக் கூறுங்கள் என்றுக் கேட்டனர்.

இந்த கேள்வியால் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே அனைவர் மனதிலும் இருப்பவன் என்ற ரீதியில வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் சிவபெருமானிடம் நடப்பதை கூற சென்றனர். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னும் சண்டைத் தொடரவே வேதமும், பிரணவம் உங்களில் இருவரும் பெரியவர் அல்ல, சிவபெருமானே பெரியவர் என்றது.

மீண்டும் கேளாமல் சண்டை நீண்டது, இதனையறிந்த சிவபெருமான் ஜோதி வடிவத்துடன் திருக்கைலையில் அமர்ந்திருக்கும் கோலத்தில் காட்சியளித்தது காட்டினார். இதனைக் கண்ட திருமால் சிரம் தாழ்த்தி வணங்கி தோல்வியை ஒப்புக் கொண்டு துதித்தார். 



ஆனால் பிரம்மனின் கர்வம் காரணமாக ஐந்து தலைகளில் ஒன்று சிவபெருமானை இகழ்ந்துப் பேசியது. இதனைக் கண்ட சிவபெருமான் பிரம்மனின் கர்வத்தை அழிக்க எண்ணி பைரவரை நினைத்து அழைத்தார்.

பைரவர் பிரம்மன் முன் தோன்றி சிவபெருமான் பற்றி இகழ்ந்து பேசிய பிரம்மனின் தலையே தன் நக நுனியால் கிள்ளியெடுத்து தன் கைகளில் ஏந்தியபடி அனைத்து தேவர் முனிவர்கள் இருப்பிடம் சென்று இரத்தப் பிச்சைக் கேட்டார். பின்னர் பிரம்மன் தன்னுடைய கர்வம் பைரவரால் அழியப் பெற்றார். சிவபெருமானை தவறாகப் பேசியதற்காக மன்னிப்பு வேண்டினார்.

பின் அவரை பலவிதமாகப் பாடித் துதித்து வழிபட்டார். இதனால் பிரம்மன் நான்முகன் என்றும் சதுர்முகன் என்றும் பெயர் பெற்றார். பிரம்மனின் கர்வத்தை அடக்க ஐந்தாவது தலையை நகநுனியால் கிள்ளியதால் சிவபெருமானுக்கு பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்றப் பெயர் ஏற்படலாயிற்று.




தரிசன இடங்கள்:

இவரை வழிபட திருக்கண்டியூர் செல்ல வேண்டும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப் படுகின்றார்.

Team - Tirikala

      

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE