VARAHA SAMHARA MOORTHI - வராகசம்ஹாரமூர்த்தி
சிவனை
நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்.
சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின்
ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம்
அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன்
சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு
திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள்
தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு
அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்,வராகசம்ஹாரமூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் வராகசம்ஹாரமூர்த்தி வடிவமானது வராக வடிவ திருமாலை அடக்கிய வடிவமாகும்.
பெயர் :வராக சம்ஹார மூர்த்தி
வாகனம் :நந்தி தேவர்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்
விளக்கம்:
இரணியாக்கன்
எனும் அசுரன் பிரமனை நோக்கி தவமிருந்தான், அவனது தவத்திற்கு மெச்சிய பிரமன் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார்.
இதனால் அந்த அசுரன் உலகை பாய்போல் சுருட்டி கடலில் சென்று மறைந்தான். தேவர்கள்
இதனால் செய்வதறியாது திகைத்தனர்.
பின் திருமாலிடம் முறையிட்டனர். திருமாலும்
அனைவரது ஆசியுடன் கருடவாகனத்தில் சென்று வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம்
கொண்டார். அது மலையை விட
உயரமாகவும். ஒவ்வொரு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளியும். அதன்
வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டு அதன் மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் உலகமே
குலுங்குகிறது.
இப்படியாக பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலையே பிரட்டிப்போட்டு
அசுரனைக் கண்டுபிடித்தார். அவனை தன் கொம்பினால் கொன்று, உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார். பின் அவ்வராகம்
பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் கொன்று தின்றது.
இதன் கொடுமை
நாளுக்கு நாள் அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட
வடிவம் கொண்டு வராகத்தை தன் சூலாயுதத்தால் கொன்று, அதன் ஒரு கொம்பொடித்து தன்மேனியில் ஆபரணமாக்கினார். அதனால்
வராகத்தின் அகந்தை ஒழிந்தது. சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியது. இதனால் அதனுடைய
மற்றொரு கொம்பு பிழைத்தது.
பின்னர் சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய
உருவம் அடைந்ததும் அனைவருக்கும் வராக புராணம் கூறி வைகுந்தம் சென்றார். திருமால்
தேவர்கள் துயர்துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார
மூர்த்தி யாகும்.
தரிசன இடங்கள்:
இவரை காசியிலும், தமிழகத்திலும்
உள்ள பலமலைக் கோயிலிலும் காணலாம்.
Credit to Maharishi, Siddhar ,Google and Mr.Krishnakumar
Team - Tirikala