SHIVA SERIES - சிவபெருமான் விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணினரா ?
IDAI PARUDA MOORTHY - இடபாருட மூர்த்தி
சிவனை
நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்
சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின்
ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம்
அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன்
சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு
திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள்
தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு
அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், இடபாருட மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் இடபாருட மூர்த்தி வடிவமானது விடையேறி காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம் .
பெயர் :இடபாருட மூர்த்தி
வாகனம் : காளை
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
விளக்கம்:
திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருந்தது . இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர் .
சிவனும் போரிற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார் . ஆயுதங்கள் தயாரானதும் சிவபெருமானும் , உமாதேவியும் தருமதேவதையாகிய வெண்ணிற இடப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வருகின்றனர் .
இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர்.பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக்கண்ட சிவபெருமான் இடபவாகனத்தை விட்டு இறங்கி மேருமலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது.இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான் .
இதனால் விஷ்ணுவிற்கு தலைகனம் ஏற்பட்டது.தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது . இதனை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி , தன்கனத்தை அதிகப்படுத்தினார் .
இதனைத் தாங்காத இடப வாகணமாகிய விஷ்ணு , இரு செவி , இரு கண்கள் , மூக்கு போன்றவை பிதுங்கியும் , இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார் . இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர் . விஷ்ணுவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார் . விஷ்ணு தலைகனம் அழிந்தது .
மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார் . பின்னர் விஷ்ணுவின் வலிமைகளை மறுபடியும் அழித்தார்.விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க,விஷ்ணுவும் சிவபெருமான் வாமபாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார் .
அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார்.எனவே சிவபெருமானுக்கு இடபாரூட மூர்த்தி என்று திருநாமம் உண்டாகிற்று.
தரிசன இடங்கள்:
இடபாரூட மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் மயிலாடுதுறையருகேயுள்ள திருவாவடுதுறையாகும் .இறைவனது
திருநாமம் கோமூத்திஸ்வரர் , மாசிலாமணிஸ்வரர் என்பதாகும் .