Rishi Prasanam Changed the Life path of a Women ? Secret 34
ரிஷி பிரசன்னம் ரகசியம் 34 எந்த ஓர் ஆத்மா தனக்கான பதில்களை தேடி தன்னை முழு நம்பிக்கையுடன் நாடி வருகின்றதோ அந்த ஆத்மாவிற்கான சிறந்த பதிலை குருஜி சித்தர்களின் நேரடி தெய்வீக வழிகாட்டலின் ஊடாக கொடுப்பார்கள் என்பதற்கான ஒரு உதாரண உண்மை பதிவே இது! 36 வயதான அந்த பெண் திருமணம் ஆகியும் தன் கணவனோடு சேர்ந்து வாழாமல் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாள். அன்று அந்த பெண்ணிற்கு , தன் துணையுடனான வாழ்கை ஒத்துபோகாமையின் காரணத்தினால் அவர்கள் விகாரத்து செய்து கொண்டார்கள். தனது இரு பிள்ளைகளின் எதிர் காலம் பற்றிய ஒரு கேள்வி அவளின் மனதை புரட்டி போட , மறுபுறம் அவள் தனது எதிர் காலத்தை ஓட்டுவதற்கான ஒரு நிலையான வேலை இல்லையென ஒரு அச்சம் கலந்த சிந்தனைகள் எதிர் காலத்தை நோக்கி செய்வது அறியாமல் திகைத்து நிற்கும் சூழ்நிலையில் அடுத்தகட்டமாக தனது வாழ்க்கையில் மறுதிருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற பல கேள்விகளுக்கு பதில் ஏதும் இன்றி தவித்துக்கொண்டிருந்தாள். வி...