நாம் நினைத்த காரியங்கள் இனிதே நடைபெறும் - நாடி ரகசியம் 36 I Nadi Reading secret -36
நாடி ரகசியம் 36 சித்தர்களை நமது வேண்டுதல்களுக்காக சரணடைந்த நாம் அவர்கள் பரிந்துரைக்கும் வழிகாட்டல்களை சாதாரணாக எண்ணிவிட கூடாது. நாம் அவர்கள் கூறும் வழிகாட்டல்களை எவ்வித சந்தேகங்களோ தாமதங்களோ இன்றி சரிவர செய்தோமேயானால் நாம் நினைத்த காரியங்கள் இனிதே நடைபெறும் என்பதற்கான சான்றே இந்த பதிவு. அன்று பங்குனி மாதம் 2 ஆம் திகதி 2019 , சென்னையில் சொந்தமாக தொழில் ஒன்றை நடாத்தும் ஒரு தொழிலதிபரான அந்த தந்தை தனது மகளுடன் குருவின் இருப்பிடத்திற்கு வந்திருந்தார். அவர்களை அழைத்த குருஜி அவர்களின் வருகைக்கான காரணங்களை வினாவவே , தனது மகளின் மாங்கல்ய பேற்றிக்காக குருவை நாடி வந்ததாகவும் , தனது மகளுக்கு பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் சின்ன சின்ன விடயங்களால் அவள் மாங்கல்ய பேறு பின்னோக்கி செல்கின்றது அதற்கு தாங்களே நல் வழிகாட்டல் ஒன்றை காட்ட வேண்டும் என்று குருவை நோக்கி கேட்டார். குருவும் நீ சித்தர்களிடம் உனது வேண்டுதலை முறையிடு அவர்கள் உனக்கான வழிகாட்டலை அருள்வார் என்று உரைத்து , உனது மகளின் கைப்பட எழுதிய பெயரினை நான் சித்தர்களுக்கு பூஜை செய்யும் நேரத்தில் அவர்கள...